/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதற்கோர் வழி காணுங்க! கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலர் பணி காலி; கூடுதல் பொறுப்பால் விவசாயிகள் அலைக்கழிப்பு

ADDED : ஆக 13, 2024 05:50 AM
வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 42 இடங்களில் செயலாளர் பணியிடம் காலியாக உள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் விவசாயிகளின் நலன் கருதி இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் 199 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இந்த கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கான பயிர் கடன், நகை கடன், ஆடு , மாடு லோன், மகளிர் குழுக்களுக்கான லோன் என பல்வேறு கடன் வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது. மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள சங்கங்களில் பெரும்பாலானவற்றில் செயலாளர்கள் பணியிடம் காலியாக உள்ளன. கூடுதல் பொறுப்பாக கவனிப்பதால் செயலாளர்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர். விவசாயிகள் ,பொது மக்களும் அலைக்கழிக்கப்படுகின்றனர். விரைவில் மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் பொதுமக்கள் ,விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
............
நடவடிக்கை எடுங்க
மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் பயிர் கடன், நகை கடன்களை பெற வசதியாக காலி கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். செயலாளர் இல்லை என்றால் பொதுமக்கள் தான் அலைக்கழிக்க நேரிடும். சாகுபடி காலம் துவங்கும் முன்பு இதன் மீது மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
ஏ.ராஜரத்தினம், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், குஜிலியம்பாறை.
.............