/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊராட்சி நிர்வாகத்தில் முன்னாள் பிரதிநிதிகள் தலையீடு: பதவிக்காலம் முடிந்தும் ஆதிக்கம் காட்டுவதால் அதிருப்தி

ADDED : பிப் 22, 2025 05:58 AM

மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 306 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து அமைப்புகளிலும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஒன்றியங்களில் பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்கள் என நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் கண்காணிப்பு பெயரளவில் மட்டுமே இருந்தது. பல இடங்களில் கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், வீடியோ கான்பரன்சிங் கலந்தாய்வு கூட்டம், வெளி மாவட்ட பயிற்சி போன்ற காரணங்களை கூறி ஊராட்சி நிர்வாக செயல்பாடுகளை கண்காணிக்க அலுவலர்கள் வருகையை தவிர்த்தனர்.
ஜனவரி 5ல் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்தபோதும் சம்பந்தப்பட்ட இடங்களில் அப்பகுதியை சார்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் ஆகியோரின் ஆக்கிரமிப்பிற்கு குறைவில்லை.எந்த நேரமும் அலுவலக முன் புறம், அறைகள் போன்றவற்றில் அமர்ந்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். போதாக்குறைக்கு கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கமும் தாராளமாக தொடர்கிறது. ஒன்றிய அலுவலகங்களில், பொறியியல் துறை கணினி அறை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் மகளிர் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் ,ஒப்பந்ததாரர்கள் போன்றோர் எந்த நேரமும் ஆக்கிரமித்து உள்ளனர்.
முன்னாள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்களின் ஆதிக்கம் நீடிப்பதால் பிற கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பல்வேறு அலுவல்களுக்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்த போதும் தவிர்க்க வேண்டிய சூழல் உள்ளது. இப்பிரச்னையால் நலத்திட்ட, நிர்வாக பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளதாக பணியாளர்களும் புலம்புகின்றனர்.