/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் துவக்கம்
/
இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் துவக்கம்
ADDED : மார் 23, 2024 06:21 AM

ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி கருணாநிதிநுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4, குரூப் 2, தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது.
காளாஞ்சிப்பட்டி ஊராட்சியில் டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு கிராம மாணவர்களும் தங்களை தயார் படுத்திக் கொள்ளும் வகையில் அரசு சார்பில் ரூ.10.81 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பிப்.27 ல்திறந்து வைத்தார்.
இங்கு 800 பேர் அமரும் நவீன வசதிகளுடன் ஏ.சி., கருத்தரங்க கூடம், பொதுநுாலகம் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. விரைவில் ஆண்கள், பெண்களுக்கு தனி விடுதிகள் கட்டப்பட உள்ளன.
நேற்று நடந்த துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பிரதீபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், காமராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், பிரபு பாண்டியன், நம் முதல்வர் திட்டப் பயிற்றுநர்கள் கார்த்திக், முருகேசன், ஊராட்சி தலைவர் அமுதா, முன்னாள் தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.

