/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார் விபத்தில் தாத்தா பலி பேத்திகள் காயம்
/
கார் விபத்தில் தாத்தா பலி பேத்திகள் காயம்
ADDED : ஜூலை 18, 2024 05:01 AM
வத்தலக்குண்டு: கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய கார் புளிய மரத்தின் மீது மோதியதில் தாத்தா பலியானார்.
பேத்திகள் காயம் அடைந்தனர்.
மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் மெய்யப்பன் 64. மகள் , 4 பேரன், பேத்திகளுடன் மதுரையிலிருந்து காரில் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா சென்றனர்.
ஊர் திரும்பிய போது கார் வத்தலக்குண்டு அருகே மல்லனம்பட்டியில் ரோட்டோர புளிய மரத்தில் மோதியது. காரில் இருந்தவர்கள் அனைவரும் காயமடைந்தனர்.
காரை ஓட்டி வந்த மெய்யப்பன் பலியானார். வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.