/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழைநீரில் மூழ்கிய பயிர்களால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு: ஈரபதத்தில் உள்ள நெல்களுக்கு விலையும் இல்லை

ADDED : நவ 07, 2024 01:59 AM

மாவட்டத்தில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. பழநி வையாபுரி குளத்து பாசன பகுதி, பால சமுத்திரம், சண்முக நதி பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நெற் பயிர்கள் அறுவடையின்போது மழை பெய்ததால் வீணாகின. இதனால் நெல்மணிகளை வியாபாரிகள் குறைந்த விலைக்கு பெற்று சென்றனர்.
அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் வைக்கோல்களை வாங்கவும் வியாபாரிகள் வரவில்லை. வைக்கோல் வியாபாரத்திலும் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
ஆயக்குடி, சத்திரப்பட்டி, கோம்பை பட்டி பகுதிகளில் மக்காச்சோளம் நீரில் மூழ்க 300 ஏக்கருக்கு மேல் முற்றிலும் வீணானது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதால் மிகுந்த கவலையில் உள்ளனர்.இது போன்ற பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து போதிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.