ADDED : ஆக 02, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி : வேம்பார்பட்டியில் தமிழ் நாடு நலிவுற்ற பெண்கள், குழந்தைகள் உணவு பாதுகாப்பு திட்ட விழாவில் கர்ப்பிணிகளுக்கு டி.எம்.எஸ்.எஸ்., மூலம் உதவிகள் வழங்கப்பட்டது.
இயக்குநர் ஜான் நெப்போலியன், பாதிரியார் நீர்மல் சூசைராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கந்தசாமி, செயலர் மார்டின் கென்னடி, செவிலியர்கள் அசுந்தா மேரி, சந்திரா, நித்தியா பங்கேற்றனர். 50 கர்ப்பிணிகள், 150 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பொருள்கள் வழங்கப்பட்டது. திட்டப் பணியாளர் அருள் சகாய ராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திட்டப்பணியாளர் பொக்கிஷம் நன்றி கூறினர் .