/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எலுமிச்சை மூடை ரூ.3500க்கு விற்பனை
/
எலுமிச்சை மூடை ரூ.3500க்கு விற்பனை
ADDED : மே 09, 2024 06:17 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு மார்க்கெட்டில் எலுமிச்சை வரத்து குறைந்ததால் ஒரு மூடை ரூ.3500க்கு விற்பனையானது.
வத்தலக்குண்டு கணவாய்ப்பட்டி, விராலிப்பட்டி, சித்தரேவு, அய்யம்பாளையம், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட எலுமிச்சை விற்பனைக்காக வத்தலக்குண்டு மார்க்கெட்க்கு கொண்டுவரப்படுகிறது. எலுமிச்சை வரத்து குறைவாக இருந்ததால் அதை வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டது. 15 கிலோ கொண்ட ஒரு மூடை ரூ. 3500 க்கு விற்பனையானது. சிறிய அளவிலான பழங்கள் கொண்ட மூடை ரூ.2000 வரை விற்பனையானது. தினமும் 50 மூடைகள் வந்த இடத்தில் தற்போது 5 மூடைகள் மட்டுமே வந்திருப்பதாகவும் வரத்து குறைந்து கொண்டே போவதால் சில வாரங்களுக்கு எலுமிச்சை விலை உயர்ந்து காணப்படும் என வியாபாரிகள் கூறினர்.