/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூப்பந்து போட்டியில் மதுரை ஓ.சி.பி. எம்., அணிக்கு முதலிடம்
/
பூப்பந்து போட்டியில் மதுரை ஓ.சி.பி. எம்., அணிக்கு முதலிடம்
பூப்பந்து போட்டியில் மதுரை ஓ.சி.பி. எம்., அணிக்கு முதலிடம்
பூப்பந்து போட்டியில் மதுரை ஓ.சி.பி. எம்., அணிக்கு முதலிடம்
ADDED : ஆக 02, 2024 06:35 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., ஓபன் - 2024 மெகா பூப்பந்து பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் மதுரை ஓ.சி.பி. எம். , அணி முதலிடம் பிடித்தது.
பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி , திண்டுக்கல் மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் இணைந்து பி.எஸ்.என்.ஏ., திண்டுக்கல் ஓபன் - 2024 மெகா பூப்பந்து போட்டிகள் நடத்தின. இதற்கான பரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்றவர்களுக்கு பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியின் அறங்காவலர் சூர்யா ரகுராம், திருவண்ணாமலை எஸ்.டி.ஏ.டி., கைப்பந்து பயிற்சியாளர் ஷர்மிளா, மாவட்ட பூப்பந்தாட்ட கழக துணைத் தலைவர் சுந்தரேசன், டி.என்.பி.பி.ஏ., உதவிச் செயலர் விஜய், தமிழக பூப்பந்தாட்ட பயிற்சியாளர் ரஜேஷ் கண்ணன் பரிசுகளை வழங்கினர்.
பள்ளிகளுக்கு இடையேலான பெண்கள் பிரிவில் மதுரை ஓ.சி.பி. எம். பெண்கள் பள்ளி அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. சென்னை சி.எஸ்.ஐ., ஜெஸ்சி மோசஸ் அணி இரண்டாமிடம், சேலம் எல்பிள்ளை அரசு பெண்கள் பள்ளி மூன்றாமிடம், கோவை ஜி.ராமசாமி நாயுடு பள்ளி அணி 4ம் இடம், கரூர் ராமகிருஷ்ணா பள்ளி 5 ம் இடம் பிடித்தது.
ஆண்கள் பிரிவில் வாட்ராப் தி ஹிந்து பள்ளி அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. சிலுக்குவார்பட்டி சுவாமி விவேகானந்தா பள்ளி 2ம் இடம், அரியலுார் அரசு பள்ளி 3ம் இடம், திருவிடைமருதுார் திருவாவடுதுறை ஆதீனம் பள்ளி 4ம் இடம், திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் நினைவு பள்ளி 5ம் இடம் பிடித்தது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் ராஜேஷ் - சத்தியமூர்த்தி முதலிடம், பரமசிவம் - முகேஷ் இரண்டாமிடம், கார்த்தி - கலைச்செல்வன் மூன்றாமிடம், அரவிந்தன் - விக்னேஷ் நான்காமிடம், ராகுல் - ஜீவா ஐந்தாமிடம் பிடித்தனர்.
50 வயதிற்கு மேற்பட்டோர்கள் பிரிவில் ஜோஸ்- ஆனந்த் முதலிடம், லோகநாதன் - மனோகரன் இரண்டாமிடம், சுரேஷ் - அருண்பகவதி மூன்றாமிடம் பிடித்தனர்.
பி கிரேடு மூத்தோர் பிரிவில் முதல் 5 இடத்தில் விநாயகா , பட்டாபிராம் ,பொன்மலை தெற்கு ரயில்வே இன்ஸ்டிடியூட், மோதிலால் பிபிசி, திண்டுக்கல் ஏ.ஆர். மருத்துவமனை பெற்றது.
பி கிரோடு ஆண்கள் பிரிவில் முதல் 5 இடத்தில் காட்டாங்குளத்துார் எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி., லயோலா கல்லுாரி, பரங்கிபேட்டை பி.எம்.டி., திண்டுக்கல் ஏ.ஆர். மருத்துவமனை, எண்ணுார் பிபிசி பெற்றது.