ADDED : மே 11, 2024 05:39 AM
பயிற்சி முகாம்
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடைகால இலவச கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் துவங்கியது. கோவை தொழிலதிபர் விக்ரம் அர்ஜுன், மாவட்ட கூடை பந்தாட்ட கழக தலைவர் செண்பகமூர்த்தி துவக்கி வைத்தனர். நாடார் உறவின்முறை செயலாளர் மோகன் குமார், மெட்ரிக் பள்ளி தலைவர் கோபிநாத், செயலாளர் பிரசன்னா, பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு பயிற்சி
வடமதுரை: வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் பா.சந்தியா, வி.சரண்யாதேவி, சி.சத்யா, ச.ஷான்மதி, சு.சர்மிளா, கா.சோபிகா, ஜெ.சோனியா, ச.சொர்ணா, ஜீ.சுபிக்ஷா ஆகியோர் கிராமப்புற வேளாண் பணி திட்டத்தின்கீழ் வடமதுரையில் தங்கினர். இவர்கள் பேர்நாயக்கன்பட்டி முத்துக்கண்ணுவின் பருத்தி வயலில் பூச்சிவிரட்டி கரைசல் தயாரிப்பு, பயன்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி தந்தனர்.
பள்ளி பஸ்கள் ஆய்வு
வேடசந்துார்:வேடசந்துார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 21 தனியார் பள்ளிகளில், மாணவர்கள் செல்லக்கூடிய 72 பஸ்கள்,வாகனங்களை ஆய்வு செய்யும் பணி,தண்ணீர்பந்தம்பட்டி ஸ்ரீ மகா வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடந்தது. மாவட்ட கல்வியாளர் சந்திரகுமார்,ஆர்.டி.ஓ., சண்முக ஆனந்த், மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ், பள்ளி தாளாளர் இளங்கோ பங்கேற்றனர். பள்ளி வாகன ஓட்டுனர்கள், உதவியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வை, வேடசந்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் விளக்கினார்.