/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சான்று இல்லாத ஆம்னி பஸ் பறிமுதல்
/
சான்று இல்லாத ஆம்னி பஸ் பறிமுதல்
ADDED : பிப் 28, 2025 01:40 AM

திண்டுக்கல்:தகுதிச்சான்று, ரோடு வரி செலுத்தாமல் மதுரையிலிருந்து பெங்களூருவிற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பஸ்சை திண்டுக்கல் தோமையார்புரம் அருகே போக்குவரத்துத்துறையினர் பறிமுதல் செய்து ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வழியாக மதுரையிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் தகுதிச்சான்று, ரோடு வரி செலுத்தாமல் இருப்பதாக போக்குவரத்துத்துறையினருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
நேற்று பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் திண்டுக்கல் தோமையார்புரம் அருகே ஆம்னி பஸ்களை சோதனை செய்தனர். மதுரையிலிருந்து பெங்களூருவிற்கு பயணிகளை ஏற்றிச்சென்ற ஆம்னி பஸ் சிக்கியது. ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்ததில் முறையான தகுதிச்சான்று, ரோடு வரி செலுத்தாமல் இருந்தது தெரிந்தது.
ஆம்னி பஸ் பறிமுதல் செய்யயப்பட்டு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிலிருந்த பயணிகள் மாற்று பஸ்சில் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டனர்.