UPDATED : ஆக 07, 2024 08:20 AM
ADDED : ஆக 07, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : காசில்லா மருத்துவம் என தமிழக அரசு சொல்கிறது.
ஆனால் அங்கீகாரம் இல்லாத மருத்துவமனை அங்கீகரிக்கப்படாத நோய் என பல காரணங்கள் சொல்லி ஓய்வூதியர்கள் செலவு செய்த தொகைகளை வழங்க மறுக்கும் காப்பீட்டு நிறுவனம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார், செயலாளர் கேசவன், டி.என்.ஜி.இ.ஏ., மாவட்ட தலைவர் முபாரக் அலி, வட்டக்கிளை தலைவர் சண்முகம் ஆகியோர் பேசினர். டி.என்.ஆர்.டி.பி.ஏ., மாநில தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஜான் ஜோசப்சிரில் பங்கேற்றனர்.