/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள்..................
/
போலீஸ் செய்திகள்..................
ADDED : மே 11, 2024 05:39 AM
ஐவர் மீது வழக்கு
குஜிலியம்பாறை: டி.கூடலுார் ஊராட்சி பால்வார்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன்35. அதே பகுதியை சேர்ந்த கணேஷ்,ஊரின் அவுட்டர் பகுதியில் நின்றார். அப்போது வெங்கடேசன்,கணேசனின் தந்தையிடம் இந்த தகவலை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சேர்வைக்காரன்பட்டி ரஞ்சித், வினோத், முனியப்பன், தினேஷ், கோபி ஆகியோர் வெங்கடேசனை தாக்கினர். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சேர்வைக்காரன்பட்டி ரஞ்சித், வினோத், முனியப்பன், தினேஷ், கோபி ஆகிய 5 நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
மின்வாரிய ஊழியர் இறப்பு
கொடைரோடு: கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். அவரது அடையாள அட்டையை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரித்த போது உசிலம்பட்டி முத்துப்பாண்டிபட்டியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கார்த்திகை பாண்டி, என தெரிந்தது. எப்படி இறந்தார் என்பது குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.
சிறுவன் பலி
பட்டிவீரன்பட்ட:விருவீடை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் லோகேஷ்13. இவர் கோடை விடுமுறையில் அதே ஊரைச் சேர்ந்த அறிவழகன் என்பவருடன் எலக்ட்ரீசியன் பணிக்கு உதவியாளராக சென்றார். பட்டிவீரன்பட்டி ஸ்டேட் பேங்க் காலனியில் பணியிலிருந்த போது மின்சாரம் தாக்கி பலியானார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.