/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
/
சாலை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூன் 20, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: கரிக்காலி செட்டிநாடு சிமென்ட் சாலை நிர்வாகம் சார்பில் திண்டுக்கல், வேடசந்துார் வழியாக கரூர் செல்லும் நெடுஞ்சாலை, திண்டுக்கல் - எரியோடு, குஜிலியம்பாறை வழியாக செல்லும் நெடுஞ்சாலையிலும் வாகன விபத்துக்களை தடுப்பதற்காக , காவல்துறையின் சாலை பாதுகாப்புக்கு உதவும் வகையில் சாலை பாதுகாப்பு தடுப்புகள் வழங்கப்பட்டன.
ஆலை இணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
டி.எஸ்.பி., துர்கா தேவி, எரியோடு இன்ஸ்பெக்டர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். ஆலை துணைப் பொது மேலாளர் ஜெயபிரகாஷ் காந்த், உதவி பொது மேலாளர் திருநாவுக்கரசு,
மேலாளர் கோபிநாத், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் பங்கேற்றனர்.