ADDED : மார் 01, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு ஸ்ரீ குருமுகி வித்யாஸ்ரம் மேல்நிலை பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். மழலை வகுப்பினர் விஞ்ஞானி போல் வேடமணிந்து திறமைகளை வெளிப்படுத்தினர். ஸ்டேட் பாங்க் சத்யா நகர் கிளை மேலாளர் தமிழ் செல்வி, பள்ளி தாளாளர் திவ்யா, நிர்வாக இயக்குனர் செந்தில் குமார், பள்ளி முதல்வர் ஷியாமளா பங்கேற்றனர்.