/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூட்டை உடைத்து கடைகளில் திருட்டு
/
பூட்டை உடைத்து கடைகளில் திருட்டு
ADDED : மார் 02, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோடு சுள்ளெறும்பு நால்ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் பாரதி 45.
நேற்று முன்தினம் இரவு கடையின் பூட்டை அறுத்து உள்ளே புகுந்த நபர் ரூ 60 ஆயிரம், பீடி, சிகரெட் பண்டல்களை திருடி சென்றார்.
இதுபோல் எலக்ட்ரானிக் கடை வைத்திருக்கும் பெருமாள் 40,கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்துடன் கல்லாப்பெட்டியை துாக்கிச் சென்றனர்.
மேலும் டூ வீலர் ஒர்க் ஷாப் வைத்திருக்கும் புதுமை ராஜா 40, கடையை உடைத்துள்ளனர். பணம் எதுவும் இல்லாததால் சென்றுவிட்டனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.