ADDED : மே 06, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : சாணார்பட்டி பெத்தயகவுண்டன்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி பாக்கியராஜ் 36. இவரும் இவரது தாயார் சூடாமணி 60, இவர்கள் இருவரும் தங்கள் வீட்டு முன்பு அமர்ந்து பேசினர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்26,என்பவர் குடிபோதையில் பாக்கியராஜின் வீட்டின் முன் சிறுநீர் கழித்தார்.
பாக்கியராஜ்,சூடாமணி அவரை கண்டிக்கவே ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் இருவரையும் கட்டையால் தாக்கினார்.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாணார்பட்டி எஸ்.ஐ., வேலுமணி ராமச்சந்திரனை கைது செய்தார்.