ADDED : செப் 12, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: - நத்தம் அண்ணா நகர் செல்வ விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
விநாயக பெருமானுக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உலக நன்மை , மழை வேண்டி திருவிளக்கு பூஜைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அண்ணாநகர் சதுர்த்தி குழுவினர் செய்திருந்தனர்.

