ADDED : மார் 24, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : கர்நாடக மாநிலத்தில் இருந்து குழாய்களை ஏற்றிச் சென்ற லாரி வேடசந்துாரை கடந்து திண்டுக்கல் நோக்கி சென்றது.
வேடசந்தூர் - காக்கா தோப்பூர் அருகே சென்றபோது டிராக்டர் மீது மோதி, அருகிலுள்ள டீக்கடைக்குள் புகுந்து , அகரம் பேரூராட்சி குப்பை கிடங்கு தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு நின்றது. லாரியை ஓட்டி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் 25,
டிராக்டர் டிரைவர் அந்தோணி 40, இருவரும் காயமடைந்தவர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

