நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த லாரி டிரைவர் மான்ராஜ் 28.
இவர் சேலத்திலிருந்து கடலைப்பொட்டு மூடைகளை ஏற்றி மதுரை நோக்கி கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்றார். வேடசந்துார் கருக்காம்பட்டி அருகே உள்ள மேம்பாலம் நுழைவு பகுதியில் லாரி வந்த போது சென்டர் மிடியனில் உள்ள தடுப்புக் கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டது. டிரைவருக்கு காயம் இல்லை. இந்த இடத்தில் இதே போல் பலமுறை விபத்துக்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

