/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யுங்க; அமைச்சர் சக்கரபாணி
/
ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யுங்க; அமைச்சர் சக்கரபாணி
ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யுங்க; அமைச்சர் சக்கரபாணி
ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யுங்க; அமைச்சர் சக்கரபாணி
ADDED : மார் 08, 2025 06:16 AM

கோபால்பட்டி : ''அ.தி.மு.க.,வினர் முதலில் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள்-. ஆட்சியைப் பிடிப்போம் என்ற பகல் கனவு காண வேண்டாம் ''என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
கோபால்பட்டியில் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி , சாணார்பட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஹிந்தி திணிப்பு புதிய கல்விக் கொள்கை மும்மொழித்திட்டம் என்ற ரூபத்தில் தலை துாக்கி உள்ளது. அதை ஏற்று கொண்டால் மட்டுமே நிதி தருவோம் என மிரட்டுகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பை காரணம் காட்டி தொகுதியை குறைக்க பார்க்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆத்தூர் ,ஒட்டன்சத்திரம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே அரசின் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதாக பேசி உள்ளார். அவரின் கருத்து தவறானது.
அவர் அமைச்சராக இருந்த பத்தாண்டு காலத்தில் ஒட்டன்சத்திரம், ஆத்துாரை புறக்கணித்தார். அவர் செய்த செயல்களை நாங்கள் செய்யவில்லை. நத்தம் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெறுகின்றன. வரும் தேர்தல் நத்தம் தொகுதியை தி.மு.க., கைப்பற்றும் அ.தி.மு.க.,வினர் முதலில் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க முயற்சிசெய்யுங்கள் .வீணாக பகல் கனவுகளை காண வேண்டாம் என்றார்.
மேற்கு மாவட்ட பொருளாளர் க.விஜயன் தலைமை வகித்தார். சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன் வரவேற்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மேற்கு மாவட்ட துணை செயலாளர் சுந்தரராஜன்,நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக்சிக்கந்தர் பாட்சா முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத்,கேத்தரின்மெர்லினா பேசினர்.