/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காற்றுடன் மழை பெய்தாலே இருளில் முழ்கும் கிராமங்கள்
/
காற்றுடன் மழை பெய்தாலே இருளில் முழ்கும் கிராமங்கள்
காற்றுடன் மழை பெய்தாலே இருளில் முழ்கும் கிராமங்கள்
காற்றுடன் மழை பெய்தாலே இருளில் முழ்கும் கிராமங்கள்
ADDED : ஆக 25, 2024 05:02 AM
வடமதுரை: பிலாத்து பகுதியில் மழை பெய்ய துவங்கினால் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை உள்ளதால் மக்கள் பரிதவிக்கின்றனர்.
பிலாத்து ஊராட்சி பகுதியில் வாலிசெட்டிபட்டி, கம்பிளியம்பட்டி, பாரதிநகர், பெத்தப்பட்டி உட்பட சில குறிப்பிட்ட கிராமங்களில் கன மழை பெய்தாலே, காற்று சிறிது பலமாக வீசினாலே மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிக்கு வராவிடில் அன்றைய இரவு முழுவதும் இருளில் பரிதவிக்கும் நிலை உள்ளது. தேர்வு நேரங்களில் இதுபோன்ற நிலையால் மாணவர்கள் பாதிப்படைகின்றனர். மின்பாதையில் மரக்கிளைகள் உரசி சப்ளை துண்டிக்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பாதிப்பு ஏற்படுத்தும் இடங்களில் இருக்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.