ADDED : ஜூலை 11, 2011 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் அனைத்து ரோடுகளும் ஆக்கிரமிக்கப்பட்டு, பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இங்கு மதுரை, வத்தலக்குண்டு ரோடு ஓரத்தில் தள்ளுவண்டிகள், சிறு ஓட்டல்கள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். பஸ்சுக்காக நிற்கும் பயணிகளை கடை முன்பு நிற்க விடாமல் விரட்டுகின்றனர். பார்க்கிங் பகுதியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியவில்லை. அணைப்பட்டி ரோட்டின் இரு ஓரங்களிலிலும் மரக்கடைகள் இருப்பதால், பொருட்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். சில நேரங்களில், அணைப்பட்டி செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்கு செல்லாமல், இங்கேயே அரை மணி நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.