/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
13வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்
/
13வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்
ADDED : செப் 12, 2024 05:21 AM

திண்டுக்கல்: பெரியகோட்டை களத்துகொட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் மகனின் உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
பெரியகோட்டை களத்துகொட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி35. ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றுகிறார். இவரது மகன் கிஷோர்13. இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இறந்தார்.
இவரது உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து சிறுவனின் இறுதிச்சடங்கு பெரியகோட்டை பகுதியில் நடந்தது. கலெக்டர் பூங்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
டீன் சுகந்திராஜகுமாரி கூறியதாவது: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இதயத்தை சென்னை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்டனர். வைரஸ் பாதிப்புகள் இருக்குமோ என்ற சந்தேகத்தில் வேண்டாம் என தெரிவித்தனர். தோல் திசுக்கள் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.