தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 15 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

15 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

15 தாசில்தார்கள் பணியிட மாற்றம்


ADDED : ஜூலை 04, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், ஜூலை 5

மாவட்ட வருவாய்த்துறையில் 15 தாசில்தார்களை பணியிட மாற்றம், நியமனம் செய்து கலெக்டர் துர்கா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அகதிகள் நலன் கலெக்டர் அலுவலகம் டேனியல்பிரேம்குமார் நத்தத்திற்கும், நத்தம் பாண்டியராஜ் ஆதிதிராவிடர் நலன் திண்டுக்கல்லிற்கும், ஆதிதிராவிடர் நலன் திண்டுக்கல் சுரேஷ்குமார் ஆத்துாருக்கும், ஆத்துார் முத்துமுருகன் முத்திரைத்தாள் பழநிக்கும், முத்திரைத்தாள் பழநி ருக்குமணி நிலம் எடுப்பு திண்டுக்கல்லிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கிட்டங்கி மேலாளர் டாஸ்மாக் திண்டுக்கல் சண்முகம் ஒட்டன்சத்திரத்திற்கும், ஒட்டன்சத்திரம் சஞ்சய்காந்தி குடிமைப்பொருள் பழநிக்கும், குடிமைப்பொருள் பழநி ராமசாமி நிலக்கோட்டைக்கும், நிலக்கோட்டை ஜெயபிரகாஷ் கிட்டங்கி மேலாளர் டாஸ்மாக் திண்டுக்கல்லிற்கும், குஜிலியம்பாறை கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல் மேற்கிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மேற்கு சுல்தான்சிக்கந்தர் அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகத்திற்கும், அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகம் மணிமொழி அகதிகள் நலன் திண்டுக்கல்லிற்கும், ஆதிதிராவிடர் நலன் நிலக்கோட்டை ஜெயராஜன் நேர்முக உதவியாளர் ஆர்.டி.ஓ., அலுவலகம் கொடைக்கானலுக்கும், நேர்முக உதவியாளர் ஆர்.டி.ஓ., அலுவலகம் கொடைக்கானல் சரவணக்குமார் ஆதிதிராவிடர் நலன் நிலக்கோட்டைக்கும், சமூக பாதுகாப்பு திட்டம் குஜிலியம்பாறை ஜான்பாஸ்டின்டல்லஸ் குஜிலியம்பாறை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us