/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் தொகுதியில் 35ல் 18 ஏற்பு; 17 தள்ளுபடி
/
திண்டுக்கல் தொகுதியில் 35ல் 18 ஏற்பு; 17 தள்ளுபடி
ADDED : மார் 29, 2024 06:10 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட பெறப்பட்ட 35 வேட்புமனுக்களில் 18 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ல் தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. 35 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் காவலிகட்டி முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ., சக்திவேல், டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், உதவி தேர்தல் அலுவலர் முருகேஸ்வரி பங்கேற்றனர்.
அனைத்து வேட்பாளர்கள் , அவர்களது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்ய ஒவ்வொருவரின் பெயரும் வாசிக்கப்பட்டு ஏற்பு, நிராகரிப்பு விவரம் தெரிவிக்கப்பட்டது. நிராகரிப்பு என்றால் அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டன.
அதன்படி பா.ம.க., வேட்பாளர் திலகபாமா, மா.கம்யூ., சச்சிதானந்தம், எஸ்.டி.பி.ஐ முகம்மது முபாரக், நாம் தமிழர் கட்சி கயிலை ராஜன் உட்பட 18 பேரது மனுக்கள் ஏற்கப்பட்டன.17பேரது மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

