/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பல்லுயிர் பாதுகாப்பு மையம் வேண்டாம் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 190 பேர் முறையீடு
/
பல்லுயிர் பாதுகாப்பு மையம் வேண்டாம் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 190 பேர் முறையீடு
பல்லுயிர் பாதுகாப்பு மையம் வேண்டாம் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 190 பேர் முறையீடு
பல்லுயிர் பாதுகாப்பு மையம் வேண்டாம் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 190 பேர் முறையீடு
ADDED : மார் 11, 2025 05:30 AM
திண்டுக்கல்: போலீசார் அத்துமீறுவதாகவும், பல்லுயிர் பாதுகாப்பு மைய திட்டத்தை நிறுத்துக என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் 190 பேர் மனுக்கள் வாயிலாக கலெக்டரிடம் முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 190 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
ரூ.44.80 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார்,முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், தாட்கோ மாவட்ட மேலாளர் முத்துச்செல்வி கலந்து கொண்டனர்.
போலீசார் அத்துமீறுவதாக புகார்
ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் கணேசன் மனைவி சாந்தி ஹிந்து முன்னணி அமைப்பினருடன் வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், எனது கணவர் மார்ச் 8ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 :00மணிக்கு வீட்டிற்கு வந்த போலீசார் அத்துமீறி உள்ளே நுழைந்து உங்கள் கணவரை போராட்டத்திற்கு அனுப்பினால் உங்களையும் சேர்த்து சிறைக்கு அனுப்பி விடுவோம். பொய்வழக்கு போட்டு எங்கும் செல்ல விடாமல் செய்து விடுவோம் என மிரட்டினர்.
சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
நத்தம் காசம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்,''காசம்பட்டி வீர கோயிலில் 800 ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வருகிறோம்.
ஆண்கள் மட்டுமே சென்று வழிபட்டு வருகிறோம். புரவி எடுப்பு விழா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்த பகுதியில் பல்லுயிர் பாதுகாப்பு மையம் அமைக்க திண்டுக்கல் மாவட்ட வனத் துறை, அழகர்கோவில் வனச்சரக அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லுயிர் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டால் எங்களது வழிபாடுகள் தடைப்படும். பல்லுயிர் பாதுகாப்பு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.