/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்கள் நீதிமன்றத்தில் 1904 வழக்குகளுக்கு தீர்வு
/
மக்கள் நீதிமன்றத்தில் 1904 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : மார் 10, 2025 05:30 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1904 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார். நிலுவை வழக்குகள் என 1904 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.16 கோடி 79 லட்சத்து 48 ஆயிரத்து 152 நிவாரணமாக வழங்கப்பட்டது.
போக்சோ நீதிபதி வேல்முருகன், குடும்ப நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், மகிளா நீதிபதி சரண், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கனகராஜ், கூடுதல் சார்பு நீதிபதி கோகுலகிருஷ்ணன், சிறப்பு சார்பு நீதிபதி சோமசுந்தரம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் திரிவேணி, முதன்மை உரிமையியல் நீதிபதி ரங்கராஜ், குற்றவியல் நீதிமன்றம் சவுமியா மேத்யூ, ஆனந்தி கலந்து கொண்டனர்.