/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு நிலத்தில் மரங்கள் வெட்டி கடத்திய 2 லாரிகள் பிடிபட்டன
/
அரசு நிலத்தில் மரங்கள் வெட்டி கடத்திய 2 லாரிகள் பிடிபட்டன
அரசு நிலத்தில் மரங்கள் வெட்டி கடத்திய 2 லாரிகள் பிடிபட்டன
அரசு நிலத்தில் மரங்கள் வெட்டி கடத்திய 2 லாரிகள் பிடிபட்டன
ADDED : ஆக 08, 2024 12:21 AM

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதி அரசு நிலத்தில் மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது வருவாய்த்துறை போலீசில் புகார் அளித்துள்ளது.
கொடைக்கானல், சின்ன பள்ளத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கூக்கால் கிராமம் பழம்புத்துார் பகுதியில், மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையில் புகார் அளித்தார். வெட்டிய மரத்தை ஏற்றிச் சென்ற லாரியை கூக்கால் பகுதியில் தடுத்து நிறுத்தினார்.
வருவாய்த்துறை விசாரணையில், அனுமதியின்றி அரசு நிலத்தில் மரம் வெட்டியது உறுதியானது. ஆனைமலை புலிகள் காப்பக கொழுமம் வனக்கோட்டத்தில் இருந்து மரம் வெட்ட அனுமதி, மரக்கட்டைகளை லாரியில் எடுத்து செல்வதற்கு அனுமதி சீட்டும் வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ., சிவராம் விசாரித்தார்.
அதில், கூக்காலை சேர்ந்த வாணி செல்வம் என்பவரது பட்டா நிலத்தில் யூகலிப்டஸ் மரம் வெட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் துணையுடன் கூக்கால் பழம்புத்துார் பகுதியில் பட்டா நிலம் எனக் கூறி அரசு நிலங்களிலும் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது.
மரங்களை கடத்திய இரு லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். அரசு நிலத்தில் மரம் வெட்டி கடத்தியதாக மன்னவனுாரை சேர்ந்த அய்யனார், சின்னப்பள்ளத்தை சேர்ந்த வினோத்குமார், அவரது மனைவி ரித்திகா, கொடைக்கானலை சேர்ந்த முகமதுசேட் ஆகியோர் மீது வி.ஏ.ஓ., ஷேபா செல்வராணி போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.