/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
210 ரேஷன் கடைகளுக்கு கண் கருவிழி பதிவு கருவி
/
210 ரேஷன் கடைகளுக்கு கண் கருவிழி பதிவு கருவி
ADDED : ஜூன் 15, 2024 06:46 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 210 ரேஷன் கடைகளுக்கான கண்கருவிழி பதிவு கருவி மூலம் ரேகை பதிவு செய்து பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார்.
இதற்காக தாடிக்கொம்பு ரேஷன் கடையில் நடந்த விழாவில் கலெக்டர் பூங்கொடி, ஆர்.டி.ஓ., சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் அன்புக்கரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் பேசியதாவது : இந்தியாவிலே தமிழகத்தில்தான் கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்படுகிறது .
பொதுவிநியோகத் திட்டத்திற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற தனித்துறை தி.மு.க., ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது. கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்போது சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் கைரேகை பதிவினால் ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது என்றார்.