/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாளை குரூப் 2 தேர்வு 22,693 பேர் எழுதுகின்றனர்
/
நாளை குரூப் 2 தேர்வு 22,693 பேர் எழுதுகின்றனர்
ADDED : செப் 13, 2024 05:38 AM
திண்டுக்கல்: நாளை (செப்.14) நடக்கும் குரூப்2 தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 22,693பேர் எழுதுகின்றனர் . இதற்காக 83 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குரூப் 2 தேர்வு நாளை நடக்கும் நிலையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி பேசியதாவது:
குரூப் 2 தேர்வு செப்.14 காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.
தேர்வாளர்கள் காலை 8:30 மணிக்குள் வந்து வருகை பதிவினை உறுதி செய்ய வேண்டும்.
9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். 83 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் 22,693 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதை கண்காணிக்க 19 நடமாடும் குழு , 5 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுக்கள் ,ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் இருக்க வேண்டும், என்றார்.
டி.ஆர்.ஓ.,சேக் முகையதீன், பழநி சார் ஆட்சியர் கிசான் குமார்,கலெக்டர் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அலுவலர்கள் பிரபு,சிவராமகிருஷ்ணன்,தமிழரசன் பங்கேற்றனர்.