ADDED : மே 20, 2024 06:11 AM
திண்டுக்கல்: பட்டியலினத்தவர்,பழங்குடியினர் தொழில்முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுகிறது.
2023 இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டு இணைய வழியாக நிதி மேலாண்மை வர்த்தக யுத்திகள் போன்ற தலைப்புகளின் கீழ் 10 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. 1,303 தொழில்முனைவோர்களுக்கு ரூ.159.76 கோடியும்,288 பெண் தொழில்முனைவோருக்கு ரூ.33.09 கோடி மானியமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 374 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 279 நபர்களின் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
74 நபர்களின் விண்ணப்பங்களுக்கு தற்காலிக கடன் ஒப்பளிப்பும், 60 விண்ணப்பங்களுக்கு இறுதிக் கடன் ஒப்பளிப்பும் பெறப்பட்டதைத் தொடர்ந்து 48 விண்ணப்பதாரர்களுக்கு ரூ.4.70 கோடி கடன் தொகை வழங்கப்பட்டதில் மானியமாக ரூ.2.53 கோடி வழங்கப்பட்டது.

