/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி
/
அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி
ADDED : ஏப் 08, 2024 04:27 AM
திண்டுக்கல்: மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் சட்டசபை தொகுதிவாரியாக நேற்று நடந்தது.
தேர்தல் பணியில் ஈடுபடும் பல்வேறு அலுவலர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மார்ச் 24ல் நடந்தது.
இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது.
அதன்படி 7 சட்டசபை தொகுதிகளில் 2121 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 10,473 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 40 பேருக்கு ஒரு அறை வீதம் பயிற்சி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
எந்த ஓட்டுச்சாவடி மையம் என நிர்ணயம் செய்த பின் ஏப். 18 ல் 3ம் கட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.

