/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடையை மீறி விநாயகர் ஊர்வலம் 17 பெண்கள் உட்பட 37 பேர் கைது
/
தடையை மீறி விநாயகர் ஊர்வலம் 17 பெண்கள் உட்பட 37 பேர் கைது
தடையை மீறி விநாயகர் ஊர்வலம் 17 பெண்கள் உட்பட 37 பேர் கைது
தடையை மீறி விநாயகர் ஊர்வலம் 17 பெண்கள் உட்பட 37 பேர் கைது
ADDED : செப் 08, 2024 05:09 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி சார்பில் அனுமதியின்றி ஊர்வலமாக எடுத்துச் சென்ற விநாயகர் சிலையை பறிமுதல் செய்த போலீசார் 17 பெண்கள் உட்பட 37 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல் குடைப் பாறைப்பட்டியில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வர சில ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடைப்பாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் ஹிந்து முன்னணி சார்பில் 3 அடி உயர விநாயகர் சிலை தடையை மீறி வைக்கப்பட்டது.
நேற்று காலை முதலே அப்பகுதியில் 50 க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.தொடர்ந்து விநாயகர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதன்பின் விநாயகர் சிலையை ஹிந்து முன்னணியினர் ஊர்வலமாக எடுத்து சென்றனர். மேளம், தாளங்களுடன் சென்ற சிலையை வத்தலகுண்டு ரோட்டை நெருங்கிய போது போலீசார் மறித்து பறிமுதல் செய்தனர்.
ஊர்வலமாக வந்த 17 பெண்கள் உட்பட 37 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலை திண்டுக்கல் கோட்டை குளத்தில் தாசில்தார் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் கரைக்கப்பட்டது.
ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் வினோத்ராஜ் கூறியதாவது : பெரும்பாலான ஹிந்து மக்கள் தான் இந்த பகுதியில் வசிக்கின்றனர். ஆனால் விநாயகர் சிலையை நிறுவி ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கின்றனர். போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகவோ, போலீசாரோ முயற்சி எடுக்கவில்லையெனில் தினமும் ஒரு சிலையை நிறுவி ஊர்வலமாக எடுத்து செல்வோம். ஒரு தலை பட்சமாக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றார்.