/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பை கிடங்கில் 4 நாளாக எரியும் தீ; புகையால் மூச்சுதிணறல்
/
குப்பை கிடங்கில் 4 நாளாக எரியும் தீ; புகையால் மூச்சுதிணறல்
குப்பை கிடங்கில் 4 நாளாக எரியும் தீ; புகையால் மூச்சுதிணறல்
குப்பை கிடங்கில் 4 நாளாக எரியும் தீ; புகையால் மூச்சுதிணறல்
ADDED : ஏப் 12, 2024 05:23 AM

திண்டுக்கல் பழநிரோடு முருகபவனம் பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நகரில் சேகரிக்கப்படும் குப்பை ஆண்டுக்கணக்கில் இங்கு தேங்கி உள்ளது. இங்கு அடிக்கடி குப்பையில் தீப்பற்றி எரிவதால் அருகிலிருக்கும் முருகவனம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் அவதியை சந்திக்கின்றனர். குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி இங்குள்ள மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை நிறுத்தி தரம்பிரிக்கும் பணியை செய்கிறது. இருந்தபோதிலும் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பையில் 4 நாட்களாக தீ எரிந்து வருகிறது. இதனால் முருகவனம் முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது. மக்கள் மூச்சித்திணறல் ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். தொடரும் இப்பிரச்னையை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
..........
நடவடிக்கை எடுக்கிறோம்
முருகபவனம் குப்பை கிடங்கில் எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குப்பையில் தீ எரியாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுப்பிரமணியன்,மாநகராட்சி செயற்பொறியாளர்,திண்டுக்கல்.

