/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
10ம் வகுப்பில் 500க்கு 499 மதிப்பெண்: மாணவி சாதனை
/
10ம் வகுப்பில் 500க்கு 499 மதிப்பெண்: மாணவி சாதனை
ADDED : மே 11, 2024 05:46 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த விவசாய தம்பதி கருப்புசாமி, ரஞ்சிதம்.
இவர்களது மகள் காவியஸ்ரீயா.இவர் ஒட்டன்சத்திரம் கொசவபட்டி அக் ஷயா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.
காவியஸ்ரீயா 500 க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார். இவர் பாடவாரியாக தமிழ் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என மொத்தம் 499 மதிப்பெண்கள் பெற்றார்.
காவியஸ்ரீயா கூறியதாவது: பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் ஒத்துழைப்பு தான் இந்த அளவு மதிப்பெண் பெற காரணமாய் இருந்தது என்றார். தாளாளர் மலர்விழிசெல்வி, நிர்வாக இயக்குனர் நாச்சிமுத்து, முதல்வர் செந்தில் ஆசிரியர்கள் பாராட்டினர்.