/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கள்ள நோட்டு தயாரித்த 5 பேர் கைது
/
கள்ள நோட்டு தயாரித்த 5 பேர் கைது
ADDED : ஆக 27, 2024 04:07 AM

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கள்ள நோட்டு தயாரித்து ஆங்காங்கு சப்ளை செய்து வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடைரோடு அருகே திண்டுக்கல் --- மதுரை நான்கு வழிச்சாலை நாகையகவுண்டம்பட்டி பிரிவில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு நின்ற காரை அம்மையநாயக்கனுார் ரோந்து போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 100 ரூபாய் கள்ளநோட்டு 26,500 , கள்ளநோட்டு தயாரிக்க பயன்படும் மிஷின் இருந்தது. காரில் இருந்த 4 வயது குழந்தை உட்பட அனைரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். அதில் ஒருவர் தப்பினார்.
விசாரித்ததில் திருச்செங்கோடு ரவி 63, விருதுநகர் ரோசல்பட்டி பெரியசாமி 24, காரியாபட்டி சிவமணி 27, மதுரை பாலமேடு சுகர்தராஜ் 24, முருகேஸ்வரி 24, என்பது தெரிய வர இவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிய மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த கோட்டைச்சாமியை தேடுகின்றனர். குடும்பத்தினர் போன்று காரில் பயணம் செய்து ஆங்காங்கே கள்ள நோட்டு தயாரித்த இவர்கள் திருச்செங்கோட்டில் கள்ள நோட்டு தயாரித்து விட்டு விருதுநகருக்கு செல்லும் வழியில் போலீசாரிடம் சிக்கினர்.

