தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சமயபுரத்திற்கு 5000 பக்தர்கள் பாதயாத்திரை

சமயபுரத்திற்கு 5000 பக்தர்கள் பாதயாத்திரை

சமயபுரத்திற்கு 5000 பக்தர்கள் பாதயாத்திரை


ADDED : பிப் 28, 2025 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2025 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை: அய்யலுாரில் இருந்து ஒரே குழுவாக 5000 பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

அய்யலுார் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது 36ம் ஆண்டாக அய்யலுார் பகுதியை சேர்ந்த 5000 பேர் காப்பு கட்டி விரதமிருக்க துவங்கினர். இவர்கள் நேற்று மாலை அய்யலுார் களர்பட்டி ஆதிபராசக்தி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பின் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்தபடி குருசாமி பிச்சை தலைமையில் சமயபுரத்திற்கு புறப்பட்டனர்.

இவர்களுக்கு உதவியாக 1000 பேர் என ஒரே குழுவாக 6000க்கு மேற்பட்டோர் செல்கின்றனர். இவர்கள் மார்ச்2 ல் சமயபுரத்தில் அம்மனை தரிசனம் செய்த பின் ஊர் திரும்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us