/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தட்டச்சு தேர்வில் 5103 பேர் பங்கேற்பு
/
தட்டச்சு தேர்வில் 5103 பேர் பங்கேற்பு
ADDED : மார் 02, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல், பழநி என இரு இடங்களில் 5 மையங்களில் நடந்த தட்டச்சுத் தேர்வில் 5103 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வியில் இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு இருமுறை தட்டச்சுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2025 பிப்ரவரி மாதத்துக்கான இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தேர்வுக்கு மாவட்டத்தை சேர்ந்த 5103 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்காக திண்டுக்கல், பழநியில் உள்ள 5 கல்லூரிகளில் தட்டச்சு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதே மையங்களில் அதிவேக தட்டச்சுத் தேர்வுகள் இன்று நடைபெறுகின்றன.