/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.56.92 கோடியில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
/
ரூ.56.92 கோடியில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ரூ.56.92 கோடியில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ரூ.56.92 கோடியில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : ஜூலை 06, 2024 06:05 AM

திண்டுக்கல் : '' திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 58,895 தொழிலாளர்களுக்கு ரூ.56,92,96,836 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக,''தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜ்குமார் தெரிவித்தார்.
நலவாரியங்கள் எத்தனை செயல்படுகின்றன.
கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் பொருட்டு தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை நாள் தனித்தனி வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது
அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்புத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தையல்தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்கள், கைத்தறி, கைத்தறிப்பட்டு நெய்யும்தொழிலாளர்கள், காலணி, தோல்பொருட்கள் உற்பத்தி, தோல்பதனிடும் தொழிலாளர்கள், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள், பாதையோர வணிகர்கள், கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் என 18 நலவாரியங்கள்ஏற்படுத்தப்பட்டு செயல்படுகிறது.
உறுப்பினராக பதிவு செய்வது எப்படி
நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்வதற்கு www.tnuwwb.tn.gov என்ற இணையதளம்வாயிலாக மட்டுமேவிண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளஆவணங்களை பதிவேற்றம் செய்து நலவாரிய பலன்களை பெறலாம்.
பதிவு, புதுப்பித்தல், உதவித்தொகை பெறுவதற்கு அரசுக்கு கட்டணம் ஏதும்வேண்டியதில்லை. முற்றிலும் இலவசம். விபரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) ஒருங்கிணைந்த தொழிலாளர்அலுவலக கட்டடம் கலெக்டர் அலுவலக வளாகம் என்ற முகவரியிலோ 0451 -246 0330, losssdindigul@gmail.com மின்னஞ்சல் வாயிலாக அணுகலாம்.
பதிவு செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு பெற்று நடப்பில் 1லட்சத்து 729 தொழிலாளர்கள் உள்ளனர். 2021-22 முதல் 2023--24வரை 58,895 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரூ.56,92,96,836 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர்கள்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 53 வகையான கட்டுமானத் தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியங்களில் 60 வகையான தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள், அனைத்துவகையான அமைப்புசாரா ஓட்டுநர்கள் ,தானியங்கி தொழிலாளர்கள் அனைவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆவர்.பணிமனையில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.,பி.எப்., திட்டங்களில் உறுப்பினராக இருக்ககூடாது. முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.
என்னென்ன உதவிகள் வழங்கப்படுகின்றன
கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, விபத்து மரணம், பணியிடத்து விபத்துமரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.
இது தவிர பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, பெண், திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கி மருத்துவ பரிசோதனை, தொழிலாளர்களின் குழந்தைகள் ஐ.ஐ.டி., ஐஐஎம், எம்.பி.பி.எஸ்., போன்ற உயர்கல்வி பயில உதவித் தொகையும் கொடுக்கப்படுகிறது.
ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா
60 வயது பூர்த்தியடைந்த பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1200 வழங்கப்படுகிறது. அதோடு கை, கால், முற்றிலும் செயலிழந்த 60 வயதை பூர்த்தியடையாத தொழிலாளர்களுக்கு முடக்கு ஓய்வூதியமாக ரூ.1200 வழங்கப்படுகிறது.
ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் கணவர் ,மனைவிக்கு மாதம் ரூ.500 குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது என்றார்.