/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரே நாளில் பணியில் சேர்ந்த 60 டாக்டர்கள்
/
ஒரே நாளில் பணியில் சேர்ந்த 60 டாக்டர்கள்
ADDED : பிப் 28, 2025 06:31 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று ஒரே நாளில் புதிதாக 60 டாக்டர்கள் பணியில் சேர்ந்தனர்.
மாவட்டத்தில் 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவைகளில் போதிய டாக்டர்கள் இல்லாது நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் நிலை தொடர்ந்தது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அரசு சார்பில் டாக்டர்களுக்கான போட்டித்தேர்வுகள் நடந்தது. ஏராளமான டாக்டர்கள் வெற்றி பெற்ற நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் அதற்கான பணி நியமன ஆணையை டாக்டர்களுக்கு வழங்கினார். இதையடுத்து நேற்று ஒரே நாளில் திண்டுக்கல், பழநி சுகாதார மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 டாக்டர்கள் பணியில் சேர்ந்தனர்.