/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' கோடை விழா நிகழ்ச்சியில் 60 மாணவர்கள்
/
'கொடை' கோடை விழா நிகழ்ச்சியில் 60 மாணவர்கள்
ADDED : மே 16, 2024 05:33 AM
திண்டுக்கல், : கொடைக்கானலில் நாளை (மே 17) -தொடங்கி 10 நடக்க உள்ள கோடை விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 60 க்கு மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
கொடைக்கானலில் கோடை விழா ,மலர்கண்காட்சி நாளை தொடங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் பாரம்பரிய நடனம், இசை கருவிகள் வாசித்தில், பாட்டு, பரதம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. கலை நிகழ்ச்சியில் இந்த முறை உள்ளூர் கலைஞர்கள் ,கல்லுாரி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக பல்வேறு கல்லுாரிகளுக்கு இது குறித்த அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை என பல்வேறு பகுதி கல்லுாரிகளைச் சேர்ந்த 60 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க ஆர்வம் காட்டி உள்ளனர். விழாவில் தினமும் ஒரு மணி நேரம் கல்லுாரி மாணவர்களுக்கான மேடையாக மாற்ற உள்ளனர்.