/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் 64 போலி டாக்டர்கள்; விசாரணை
/
திண்டுக்கல்லில் 64 போலி டாக்டர்கள்; விசாரணை
ADDED : ஜூலை 05, 2024 05:43 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 64 போலி டாக்டர்கள் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை தலைமை அதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை விசாரிக்கும் பணியில் ஊரக நலப்பணிகள் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பிளஸ்2,10ம் வகுப்பு படித்து விட்டு தங்களை டாக்டர்களாக கூறிக்கொண்டு ஆங்கில வழி மருத்துவத்தில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தனர். சென்னை தலைமை சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார்படி 64 போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் விபரம் அடங்கிய பட்டியலை திண்டுக்கல் மாவட்ட ஊரக நலப்பணிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அனுப்பினர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஒருசிலர் மருத்துவம் பார்த்தது தெரிந்தது. அவர்களை கண்டறிந்து இனி மருத்துவம் பார்க்க கூடாது.
மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். போலி டாக்டர்கள் நடமாட்டம் இருந்தால் கட்டாயம் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.