ADDED : ஆக 07, 2024 10:04 PM

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மர நாய்களை வேட்டையாடிய 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பிய இருவரை தேடுகின்றனர்.
ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூதமலை அருகில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவல்படி ஒட்டன்சத்திரம் வனச்சரகர் ராஜா வனவர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினரை ரோந்து செல்ல உத்தரவிட்டார். கோகுல் என்பவர் தோட்டத்தில் மரநாய்கள் வெட்டப்பட்டு சமைக்கப்பட்ட கறியுடன் இருவர் இருந்தனர். விசாரித்ததில் துப்பாக்கியால் மர நாய்களை வேட்டையாடி சமைத்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து கொடைக்கானல் கருவேலம்பட்டி செல்லப்பாண்டி 30, கணேசன் 37, மருதபாண்டியன் 28, கோபாலகிருஷ்ணன் 41, கணக்கன்பட்டி கோம்பைப்பட்டி நாட்ராயன் 40, பதினாறு புதுார் நாகமாணிக்கம் 28, மனோகரன் 32, ஆகியோரை கைது செய்தனர். தப்பிய கருவேலம்பட்டி கண்ணப்பன் 55, காளிமுத்து 24, ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் தங்கிய வீட்டில் இருந்த வாக்கி டாக்கி, கார், அலைபேசிகளை பறிமுதல் செய்தனர்.