/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெயர்ந்து விழுந்த பள்ளி கூரை மாணவர்கள் 7 பேர் காயம்
/
பெயர்ந்து விழுந்த பள்ளி கூரை மாணவர்கள் 7 பேர் காயம்
பெயர்ந்து விழுந்த பள்ளி கூரை மாணவர்கள் 7 பேர் காயம்
பெயர்ந்து விழுந்த பள்ளி கூரை மாணவர்கள் 7 பேர் காயம்
ADDED : மார் 08, 2025 01:15 AM

திண்டுக்கல்:திண்டுக்கல், சந்தைபேட்டை ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டட கூரை பெயர்ந்து விழுந்ததில், ஏழு மாணவர்கள் காயமடைந்தனர்.
இப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படிக்கின்றனர். கட்டடங்கள், 2009 தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அவற்றில் ஏற்பட்ட சேதத்தை தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு முன் சுவர்கள் சீரமைத்தல் உள்ளிட்ட மராமத்து பணிகள் நடந்தன.
இங்குள்ள, நான்காம் வகுப்பறை கட்டடத்தில் ஒரு மாதத்திற்கு முன் சீரமைப்பு பணி நடந்தது.
நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடந்த நிலையில், நான்காம் வகுப்புக்கான வகுப்பறை கட்டடம் கூரை பெயர்ந்து விழுந்தது. இதில், மாணவர்கள் முகமது சகீல், 9, ஆண்டோ, 9, கவுதம், 9, அகிலேஷ், 9, தருண், 9, அஜய், 9, உள்ளிட்ட ஏழு பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இவர்களை ஆசிரியர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மாநகராட்சி அதிகாரிகள், தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.