ADDED : ஏப் 16, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக 7 புகார்கள் உட்பட இதுவரை 767 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள், ஓட்டுச்சாவடிகள் உட்பட பல்வேறு புகார்களை தெரிவிக்க இலவச எண், செயலி, கட்டுப்பாறை எண் போன்றவை கொடுக்கப்பட்டிருந்தது.இங்கு
பணப்பட்டுவாடா தொடர்பாக 7 , தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 61 , வாக்காளர் பட்டியல் தொடர்பாக 692, இதர புகார்கள் 7 என 767 பெறப்பட்டு புகார்களின் மீதுநடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

