/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ஒரே நாளில் 8 ரவுடிகள் கைது
/
திண்டுக்கல்லில் ஒரே நாளில் 8 ரவுடிகள் கைது
ADDED : ஜூலை 13, 2024 05:05 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் நகரில் குற்றங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஒரே நாளில் 8 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை,கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்தது. இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து செல்வோரிடம் நகை பறிப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறியது. இதைத்தடுக்கும் வகையில் ரவுடிகளை கண்காணிக்க துப்பாக்கியுடன் 20 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் ரோந்து பணியில் உள்ளனர்.
அவர்கள் மூலம் திண்டுக்கல் நகர் முழுவதும் கண்காணிக்கப்பட்டு திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன்,முத்தழகுபட்டியை சேர்ந்த செபஸ்தியார்,கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த விஷ்வா,மகேஷ்குமார்,மாலப்பட்டியை சேர்ந்த சபரிகிரி உள்ளிட்ட 8 ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதே நடவடிக்கை தொடர இருப்பதாக எஸ்.பி.,பிரதீப் தெரிவித்தார்.