ADDED : மார் 26, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரி கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கான வளாக நேர்முகத்தேர்வு சென்னை பாக்ஸ்கான் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்டது.
என்.பி.ஆர்., பொறியியல் கல்லூரி முதல்வர் மருதுக்கண்ணன், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசு கண்ணன் தலைமை வகித்தார். என்.பி.ஆர்., கல்விக்குழும துணை வேலைவாய்ப்பு அலுவலர் பி.டி.ஜெ.கே.லில்லியன் கலந்து கொண்டார். பாக்ஸ்கான் மனித வள மேலாளர்கள் அருண்குமார்,திவ்யா மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.முகாமில் கலந்து கொண்ட 81 பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர்.

