/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளத்தில் பாய்ந்த கார் ஒருவர் பலி
/
பள்ளத்தில் பாய்ந்த கார் ஒருவர் பலி
ADDED : ஆக 03, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், 44, நந்தகுமார், 30. நண்பர்களான இவர்கள் கான்ட்ராக்ட் பணி செய்தனர். இருவரும் காரில் கொடைக்கானல் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு பழனி சாலை வழியாக ஊர் திரும்பினர். செந்தில்குமார் காரை ஓட்டினார். சவரிக்காடு 7வது வளைவில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் செந்தில்குமார் பலியானார். நந்தகுமார் பலத்த காயத்துடன் காருக்குள் இருந்தார்.
உறவினர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தகவல் கிடைக்கவில்லை. தகவலறிந்து விரைந்த பழனி தீயணைப்பு துறையினர் நந்தகுமாரை மீட்டனர். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.