/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டிரான்ஸ்பார்மரில் மோதி கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
/
டிரான்ஸ்பார்மரில் மோதி கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
ADDED : ஏப் 12, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: பாளையம் ஆர்.வெள்ளோடு ரோட்டில் கோட்டாநத்தம் வளைவில் உள்ள மின் டிரான்ஸ்பார்மரில் கன்டெய்னர் லாரி மோதி கவிழ்ந்தது.
துாத்துக்குடியில் இருந்து தனியார்சிமென்ட் ஆலைக்கு தேவையான மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு குஜிலியம்பாறை குவாரி நோக்கி தனியார் கன்டெய்னர் லாரி வந்தது. துாத்துக்குடியை சேர்ந்த முத்துராஜ் 35, ஓட்டி வந்தார். பாளையம் ஆர்.வெள்ளோடு ரோட்டில் கோட்டாநத்தம் வளைவில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் மின் டிரான்ஸ்பார்மர் மீது மோதி கவிழ்ந்தது.

