/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
/
ரோட்டில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
ADDED : ஜூன் 02, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தயம் பிரிவு அருகே கன்டெய்னர் லாரி ரோட்டில் கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துாத்துக்குடியில் இருந்து பஞ்சு ஏற்றிக் கொண்டு கோவை அன்னுார் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் கள்ளிமந்தையம் பிரிவு அருகே சென்ற போது கன்டெய்னர் கவிழ்ந்தது.
துாத்துக்குடியைச் சேர்ந்த டிரைவர் அமிர்தராஜ் 39, காயத்துடன் தப்பினார். கன்டெய்னர் கவிழ்ந்ததால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.